Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்சி தாயுமானவர் சுவாமி கோயில் திருவிழா | கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!

10:12 AM Apr 22, 2024 IST | Web Editor
Advertisement

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் திருத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 

Advertisement

திருச்சி மாநகரில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாக திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார்குழலி அம்பிகை சமேத தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில்,  இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  மலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான தாயுமானவ சுவாமி திருக்கோவிலில் இருந்து சிவபெருமான் மற்றும் அம்பாள் புறப்பட்டு நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர்.

ஆலயத்தின் வரலாற்று சிறப்பு மிக்க திருவிழாவான,  சிவபெருமான் பிரசவம் பார்த்த விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.  அதன் பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில்,  தருமை ஆதீனத்தின் தலைமையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.  முக்கிய திருவிழாவான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.  காலை சுவாமி மற்றும் அம்பாள் தேரில் எழுந்தருளினர்.

அதன் பின்னர் தாயுமானவா .. ஓம் நமச்சிவாயா.... சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி என்கிற மந்திரங்கள் முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் தாயுமானவர்சுவாமி தேரையும் ... மட்டுவார்குழலி அம்மன் தேரைதும் வடம் பிடித்து இழுத்தனர்.  இந்த திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags :
ThayumanavaswamyTiruchirappalli
Advertisement
Next Article