Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்சி விமான நிலைய புதிய முனையம் | சிறப்பம்சங்கள் என்னென்ன?

01:03 PM Jan 02, 2024 IST | Web Editor
Advertisement

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக இருப்பது திருச்சி பன்னாட்டு விமான நிலையம் தான்.  பல்வேறு நாடுகளுக்குத் திருச்சியிலிருந்து இண்டிகோ,  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்,  மலிண்டோ,  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்,  ஸ்கூட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் மூலம் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக,  951 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் அமைக்கும் பணி 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. இப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

பணிகள் அனைத்தையும் 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் முடித்து,  புதிய முனையத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர விமான நிலைய ஆணையக் குழுமம் திட்டமிட்டிருந்தது.  ஆனால், கொரோனா பரவல் காரணமாக சுமார் 3 ஆண்டு காலம் பணிகள் முடங்கியதால்,  திட்டமிட்டபடி புதிய முனையத்தை செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் திறப்பு விழாவிற்காக 3 முறை திட்டமிட்டும் பணிகள் முடிவடையாத காரணத்தால்,  திறப்பு விழா தேதி தொடர்ந்து மாற்றிவைக்கப்பட்டு வந்தது.  இறுதிக்கட்ட உட்கட்டமைப்பு பணிகள் அனைத்தும் சமீபத்தில் முடிவுற்ற நிலையில் இன்று (ஜனவரி 2), திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

Advertisement
Next Article