Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஊள்பட 10 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
04:16 PM Mar 25, 2025 IST | Web Editor
Advertisement

தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில்,

Advertisement

"நெல்லை டிஐஜியாக இருந்த பா.மூர்த்தி, ஐபிஎஸ் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் டிஐஜியாக இருந்த அபினவ் குமார் ஐபிஎஸ், மதுரை மண்டல டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை காலியாக இருந்த சென்னை மாநகர காவல் உளவுப் பிரிவு -1, துணை ஆணையராக, சென்னை வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையராக இருந்த ஆர் சக்திவேல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த ஹரிகிரண் பிரசாத், சென்னை காவல்துறையின் நலப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையராக டாக்டர். வி. பாஸ்கரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சந்தோஷி ஹதிமானி ஐபிஎஸ் நெல்லை சரக டிஐஜியாக பொறுப்பு வகிப்பார் என்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ.சுஜாதாவை நியமித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags :
governmentOrderpolice officersseniortamil nadutransfer
Advertisement
Next Article