தமிழ்நாட்டில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
08:57 PM Jul 22, 2024 IST
|
Web Editor
Advertisement
தமிழ்நாட்டில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
இது குறித்த விவரம் வருமாறு:
- ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஐஏஎஸ், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய டி.ஆர்.ஓ., துர்கா மூர்த்தி ஐஏஎஸ், வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம்
- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஐஏஎஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் இணை ஆணையராக மாற்றம்
- தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி வாரிய நிர்வாக இயக்குநர் கவிதா ராமு ஐஏஎஸ், அருங்காட்சியகங்களின் இயக்குநராக மாற்றம்
- POWERFIN நிறுவன நிர்வாக இயக்குநர் அம்பலவானன், தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக மாற்றம்
- நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணனுன்னி ஐஏஎஸ், கருவூலத்துறை ஆணையராக நியமனம்
- திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் சுஹபுத்ரா ஐஏஎஸ், நெல்லை மாநகராட்சி ஆணையராக மாற்றம்
- இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் ஐஏஎஸ், ஓசூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம்
- அரசு துணை செயலாளர் அனு ஐஏஎஸ், கடலூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம்
- நாகை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஐஏஎஸ், சேலம் மாநகராட்சி ஆணையராக மாற்றம்
- சென்னை விருந்தினர் மாளிகை பொறுப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ், ஆவடி மாநகராட்சி ஆணையராக மாற்றம்
- குடிமைப் பொருள் விநியோக கழக பொது மேலாளர் சதீஷ் ஐஏஎஸ், ஈரோடு கூடுதல் ஆட்சியராக மாற்றம்
- கைத்தறித்துறை ஆணையர் விவேகானந்தன் ஐஏஎஸ், நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்
- பொதுத்துறை கூடுதல் செயலாளர் சிவஞானம் ஐஏஎஸ், சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரியாக மாற்றம்
- நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனிஷ் சாப்ரா ஐஏஎஸ், திருப்பூர் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்
- தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அமிர்த ஜோதி ஐஏஎஸ், கைவினைப்பொருட்கள் வளர்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Next Article