Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்போரூர் அருகே பயிற்சி விமான விபத்து - கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்!

திருப்போரூர் அருகே விபத்திற்குள்ளான பயிற்சி விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
11:10 AM Nov 15, 2025 IST | Web Editor
திருப்போரூர் அருகே விபத்திற்குள்ளான பயிற்சி விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Advertisement

சென்னை தாம்பரம் விமானப்படைக்கு சொந்தமான விமானம் நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது திருப்போரூர் அடுத்த தனியார் உப்பளம் தொழிற்சாலை அருகே விமானம் கீழே விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது.

Advertisement

விமானத்தில் இருந்த விமானி ஒருவர் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். இதையடுத்து விமானியை ஹெலிகாப்டர் மூலம் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் விமானம் முழுவதுமாக அப்பளம் போல் நொருங்கியுள்ளது. விமான விபத்து ஏற்பட்ட இடத்தில் திருப்போரூர் காவல் துறை மற்றும் தீயணைப்புதுறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் விமான விபத்து ஏற்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாக விமானப்படை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஜேசிபி இயந்திர உதவியுடன் கருப்பு பெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமானம் விழுந்த இடத்தின் அருகே கிடைக்கும் உதிரி பொருட்களை விமான படையினர் சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
black boxintensifiesplane crashthiruporurTraining
Advertisement
Next Article