Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொங்கல் பண்டிகைக்கான #TrainTicketBooking | தொடங்கிய சில நொடிகளிலேயே காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது!

08:03 AM Sep 12, 2024 IST | Web Editor
Advertisement

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், சில நொடிகளிலேயே காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது.

Advertisement

நீண்ட தூர பயணங்களுக்கு பொதுமக்கள் அதிகம் விரும்புவது ரயில்களை தான். ஆனால் இவற்றில் டிக்கெட் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதிலும் பண்டிகை காலங்கள் என்றால் இன்னும் சிரமம் தான். இதுதவிர தட்கல் டிக்கெட் முன்பதிவு தனியாக இருக்கிறது. அதிலும் பலத்த போட்டி காணப்படுகிறது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பே டிக்கெட்களை பதிவு செய்து கொள்ளலாம்.

அப்படி பார்த்தால் 2025 பொங்கல் பண்டிகைக்கு இன்னும் நான்கு மாதங்கள் தான் இருக்கின்றன. ஜனவரி 13 திங்கள் போகி பண்டிகை, ஜனவரி 14 செவ்வாய் பொங்கல், ஜனவரி 15 புதன் மாட்டுப் பொங்கல், ஜனவரி 16 வியாழன் உழவர் திருநாள் எனக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனவரி 10 வெள்ளிக்கிழமை அன்றே பெரும்பாலானோர் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடுவர்.

அந்த வகையில் 2025 ஜனவரி 10ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 2025 பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி இந்திய ரயில்வே நிர்வாகத்தின் ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு சென்று பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் டிக்கெட்களை முன்பதிவு செய்தனர். மேலும் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களிலும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் அதிகாலை முதலே காத்திருக்கின்றனர்.

ஜனவரி 11ஆம் தேதியில் பயணம் செய்வோர் செப்டம்பர் 13 வெள்ளி அன்றும், ஜனவரி 12ஆம் தேதியில் பயணம் செய்வோர் செப்டம்பர் 14 சனி அன்றும், ஜனவரி 13ஆம் தேதியில் பயணம் செய்வோர் செப்டம்பர் 15 ஞாயிறு அன்று டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Tags :
Pongaltamil naduTrain ticket
Advertisement
Next Article