Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

20-நாட்களுக்கு பின் திருச்செந்தூரில் துவங்கிய ரயில் சேவை! தாமதமான அறிவிப்பால் வெறிச்சோடி காணப்பட்ட ரயில் பெட்டிகள்!

09:34 PM Jan 06, 2024 IST | Web Editor
Advertisement

ரயில்வேயின் தாமத அறிவிப்பால், 20 நாட்களுக்கு பிறகு திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்ட செந்தூர் விரைவு ரயிலில் பயணிகள் இன்றி ரயில் பெட்டிகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

Advertisement

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ரயில் நிலையம் மற்றும் தண்டவாளப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கின. இதனால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.

மேலும், திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே உள்ள தாதன்குளம் பகுதியில் ரயில் பாதை முற்றிலுமாக சேதமடைந்து இருந்தது. அதன் காரணமாக இந்த வழித்தடத்தில் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனிடையே, தாதன்குளம் ரயில் பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 20 நாட்களுக்கு பிறகு இன்று (ஜன.6)தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளர் பென்னி   ஆய்வுகள் மேற்கொண்டார். பின்னர் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, இன்று இரவு 8:20 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து செந்தூர் விரைவு ரயில் புறப்பட்டு திருநெல்வேலி வழியாக வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி திருச்செந்தூரிலிருந்து செந்தூர் விரைவு புறப்பட்டு சென்றது. இருப்பினும், ரயில்வேயின் தாமத அறிவிப்பால் பயணிகள் இன்றி ரயில் பெட்டிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், ரயில்வேயின் தாமத அறிவிப்பால் 45 முன்பதிவில்லா சீட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Tags :
Chendur ExpressNews7Tamilnews7TamilUpdatessouthern railwaytiruchendurTirunelveli
Advertisement
Next Article