Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாகிஸ்தானில் 182 பயணிகளுடன் கடத்தப்பட்ட ரயில்... 30 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை... 80 பேரை மீட்ட பாதுகாப்பு படையினர்!

06:48 AM Mar 12, 2025 IST | Web Editor
Advertisement

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில், பலோச் விடுதலை அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பலுசிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்கக்கோரி அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பலுச் மாகாணத்தின் வளங்களை சுரண்டும் அரசு, அப்பாவி மக்களை வஞ்சிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணியர் ரயில் நேற்று (மார்ச் 11) காலை சென்று கொண்டிருந்தது. தாதர் என்ற இடத்தை அடைந்தபோது, ரயில் இன்ஜினுக்கு சில மீட்டர் துார இடைவெளியில் தண்டவாளத்தில் தீடீரென வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.

உடனடியாக, பி.எல்.ஏ., எனப்படும் பலுச் விடுதலை அமைப்பினர் ரயிலை முற்றுகையிட்டனர். அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இன்ஜின் டிரைவர் உயிரிழந்தார். ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 450 பயணிகளை பலுச் அமைப்பினர் சிறைபிடித்தனர். பின்னர் பொதுமக்களை மட்டும் விடுவித்துவிட்டு, ராணுவ வீரர்கள் உட்பட 182 பேரை மட்டும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறை பிடித்ததும், 182 பேரை பணய கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறோம். கடந்த 15 மணிநேரத்திற்கும் கூடுதலாக அவர்கள் எங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். இந்த நடவடிக்கையின்போது, கூடுதலாக 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடயே, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 13 பலுச் அமைப்பினர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட சுமார் 80 பயணிகளை பாதுகாப்புப் படையினர் மீட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Tags :
Armynews7 tamilNews7 Tamil UpdatespakistanpassengersRescuesecurity forceTrainTrain Hijack
Advertisement
Next Article