Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியானது #SIR திரைப்படத்தின் டிரெய்லர்!

01:22 PM Sep 18, 2024 IST | Web Editor
Advertisement

போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ படத்தின் டிரெய்லர் வெளியானது.

Advertisement

நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார். முதலில் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என பெயரிடப்பட்ட இந்த படம் பின்னர் சார் என மாற்றப்பட்டது. படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை பேசும் படமாக உருவாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டிரெய்லரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னரே கன்னிமாடம் என்னும் படத்தை நடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். இது அவரது இயக்கத்தில் 2வது படமாகும். கன்னிமாடம் படம் வர்த்தகரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் சினிமா வட்டாரத்தில் கவனிக்கப்பட்டது.

Tags :
Bose VenkatsirTrailervetrimaaranVimal
Advertisement
Next Article