அல்பேனிய இசை விழாவில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நேர்ந்த சோகம் | #ViralVideo
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அல்பேனியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இன ரீதியாக அவமதிக்கப்பட்டதாகக் கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது கூற்றுப்படி, ஜேசன் டெருலோ இசை நிகழ்ச்சியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த வைரலான இந்த வீடியோ ஆகஸ்ட் 20 அன்று 'PostsByFeds' என கணக்கில் வெளியிடப்பட்டது.
அந்த வீடியோவில், “ இசை நிகழ்ச்சிக்காக வரிசையில் நின்றுகொண்டிருக்கும்போது சில உள்ளூர் பெண்கள் வரிசையில் குருக்கே வந்துள்ளனர். அதை அவர் அதைச் சுட்டிக்காட்டியபோது, அந்தப் பெண்கள் "இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறி, அவதூறான கருத்துக்களைக் கூறி அவளைப் பார்த்து சிரித்தாக அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோவை இங்கே பாருங்கள்:
"நான் அல்பேனியாவில் உள்ள டிரானாவில் ஜேசன் டெருலோ கச்சேரியில் இருக்கிறேன், நான் வரிசையில் காத்திருந்தேன். இந்த நான்கு பெண்கள் குழு அங்கு வந்து லைனை குறுக்கிட்டனர். நான் அதைச் சுட்டிக்காட்டியபோது, நான் திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். "என்று அந்த பெண் கூறுவதைக் கேட்கலாம்.