Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை அடுத்த குன்றத்தூரில் நேர்ந்த விபரீதம்! அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவனின் கால்கள் சக்கரங்களில் சிக்கி சிதைந்தன!

10:21 PM Nov 17, 2023 IST | Web Editor
Advertisement

சென்னை அடுத்த குன்றத்தூரில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்ததில் சக்கரங்களில் சிக்கி கால்கள் சிதைந்தன.

Advertisement

குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி நான்கு சாலை சந்திப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியிலிருந்து வீடுகளுக்கு செல்வதற்காக அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கம். இந்நிலையில் கொல்லச்சேரி நான்கு சாலையிலிருந்து குன்றத்தூர் நோக்கி வந்த அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் வந்தனர்.

அப்போது குன்றத்தூர் தேரடி அருகே வந்தபோது படிக்கட்டில் பயணம் செய்தபடி வந்த மாணவன் ஒருவன் தவறி கீழே விழுந்ததில் அவனது காலில் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் இரண்டு கால்களும் தூண்டானது. இதனை கண்டதும் படியில் தொடங்கி வந்த சக மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பொதுமக்கள் பள்ளி மாணவனின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காயமடைந்த மாணவனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவனின் இரண்டு கால்களும் துண்டான சம்பவம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.  குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்ட பள்ளிக்கு பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களை போல் படிக்கட்டில் தொங்கியபடியும் அரசு பேருந்துகளின் மேற்கூறையில் ஏறியபடியும் சாகசங்கள் செய்தபடி ஆபத்தான முறையில் செயல்வது இந்த பகுதியில் அதிக அளவில் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags :
AccidentKundrathurnews7 tamilNews7 Tamil UpdatesSchool StudentStanley Hospitalstudent
Advertisement
Next Article