உக்ரைனில் தொடரும் துயரம்: கடும் பனிப்புயலால் 5 பேர் பலி!
04:44 PM Nov 28, 2023 IST
|
Web Editor
Advertisement
உக்ரைனில் கடுமையான பனிப்புயல் தாக்குதலால் 5 பேர் உயிரிழந்து, 19-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
Advertisement
உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியான ஒடசாவில் வீசிய கடும் பனிப்புயலால் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
சுமார் 21 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைனின் கீவ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை எதிர் கொண்டுள்ளன. இந்நிலையில், மத்திய மற்றும் தெற்கு உக்ரைனில் பனிப் புயல் தாக்கியதில், 5 பேர் உயிரிழந்தனர். அண்டை நாடானா மால்டோவாவில் 3 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பனிப்புயலால் 17 மண்டலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பலத்த வேகத்துடன் பனிக்காற்று வீசியதில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் பல ஊர்களில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கிரிமியாவில் உள்ள பல நகராட்சிகளில் அவசரநிலை அமலில் உள்ளது. உக்ரைன் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Next Article