Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரளாவில் தொடரும் சோகம் - அமீபிக் மூளைக்காய்ச்சலால் மேலும் ஒருவர் மரணம்..!

கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
05:42 PM Oct 12, 2025 IST | Web Editor
கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
Advertisement

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் சமீப காலமாக மக்களை பல்வேறு நோய்கள்  ஆட்டிப்படைத்து வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக அமீபிக் மூளைக் காய்ச்சல் பலரையும் தாக்கி உயிர்ப்பலியை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

இந்த நிலையில்  அமீபிக் மூளைக்காய்ச்சலால் பதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொல்லம் பகுதியை சேர்ந்த ராஜி (48) என்பவர்
சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

அமீபிக் முளை காய்ச்சலால்  கேரளாவில்  இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர். அதிலும் இந்த  மாதத்தில் மட்டும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 104 பேர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
amebabreaineatingamebaKeralalatestNews
Advertisement
Next Article