Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காணும் பொங்கல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் | சென்னையில் 3,168 கேமராக்கள் மூலம் போக்குவரத்து கண்காணிப்பு...!

06:51 AM Jan 17, 2024 IST | Web Editor
Advertisement

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று 3 ஆயிரத்து 168 கேமராக்கள் மூலம் போக்குவரத்து கண்காணிக்கப்படும் என சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னையில் இண்றைய தினம் காணும் பொங்கலை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கு மற்றும்
போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது குறித்த சென்னை (சட்டம்
ஒழுங்கு) வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க், தெற்கு மண்டல கூடுதல்
ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர்
ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட
இடங்களில், மணல் பரப்புக்கு பொதுமக்கள் வர அனுமதி உண்டு, அதே சமயம் கடல்
பகுதிகளில் செல்ல அனுமதி இல்லை. சென்னை மாநகராட்சி முழுவதும், ஹோம் காட் உட்பட 17,000 காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். குழந்தைகளைத்
தவறவிட்டால், அது குறித்த புகார்களுக்கு பல இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. பெற்றோர் அல்லது உறவினர்கள் அந்த இடங்களில் புகார்
கொடுக்கலாம், அல்லது 100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

சென்னை மெரினா கடற்கரையில் 12 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலைகளில் கூடுதல் ரோந்து வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளது. பொதுமக்கள்
எங்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். கடற்கரை பகுதிகளில் அலைகளில் மாட்டி
உயிர்ச்சேதம் ஏற்படாத வண்ணம், நீச்சல் தெரிந்த கடலோர காவல் படையினர் பாதுகாப்பு
பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பாக இரவு 8 மணியிலிருந்து பொதுமக்கள்
கடற்கரையிலிருந்து வெளியேற்றப் படுவார்கள். இரவு 10 மணிக்கு மேல்
பொதுமக்களுக்குக் கடற்கரை பகுதிகளில் அனுமதி இல்லை.

காணும் பொங்கல் என்ற சூழலில் போக்குவரத்து நெரிசல் நிச்சயம் இருக்க கூடும்.
எனவே மக்கள் முன்கூட்டியே தங்கள் விமான, ரயில் மற்றும் வெளியூர் பயணங்களைத்
திட்டமிட்டுக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என அவர் பேசினார்.

அதன் பின் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து
போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் பேசியதாவது:

இந்த புத்தாண்டு நாம் கொடுத்த வழிமுறைகளை மக்கள் சரியாக பின்பற்றியதால், இந்த
ஆண்டை விபத்தில்லாத புத்தாண்டாக மாற்றியது. அதே போல இந்த காணும் பொங்கலும்
விபத்து இல்லாத பொங்கலாக இருக்க வேண்டும். கடற்கரை முக்கிய சாலைகளில்
வாகனங்களை விட்டுவிட்டு கடற்கரைக்கு செல்ல வேண்டாம்.

குறிப்பிடப்பட்ட பார்க்கிங் வசதிகளை பயன்படுத்தி வாகனங்களை நிறுத்த வேண்டும். 3168 கேமிராக்கள் போக்குவரத்து கண்காணிப்புக்கு வைக்கப்பட்டுள்ளது. ரேஸ், வீலிங் போன்ற
செயல்களில் ஈடுபட்டால் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க தொடர்
கண்காணிப்பில் கேமிராக்கள் இருக்கும்.

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்கு போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் இருக்கவும் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ட்ரோன் கேமிராக்கள் மூலம் முக அடையாளங்களை வைத்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்கப் பட உள்ளனர்.

மாறாக சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றங்கள் ஏதும் இல்லை. ஒருவேளை கட்டுப்படுத்த முடியாத நிலையில், காமராஜர் சாலை வழியாக பெல்ஸ் ரோடு சென்று விக்டோரியா ஹால் வழியில் திருவல்லிக்கேணி பகுதிக்கு வாகனங்கள் திருப்பி விடப்படும். கலங்கரை விளக்கம் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படும் என அவர் பேசினார்.

Advertisement
Next Article