Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Chennai மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்து இயல்பு நிலைக்கு திரும்புகிறது!

05:18 PM Oct 06, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மெல்ல மெல்ல சீரடைகிறது. காமராஜர் சாலை முழுவதும் மக்கள் கூட்டம் திரண்டிருந்த நிலையில், தற்போது நேப்பியர் பாலம், உழைப்பாளர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து சீராகி மாநகர பேருந்து போக்குவரத்தும் தொடங்கியது.

Advertisement

இந்திய விமானப்படை தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கறையில் இன்று நடைபெற்ற விமான சாகச கண்காட்சி, பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. அதேவேளையில் மெரினா சாகச நிகழ்ச்சி முடிந்து 2 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் குறையாமல் இருந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில் தற்போது மெல்ல மெல்ல போக்குவரத்து சீராகிறது.

இருப்பினும் போதிய பேருந்து வசதிகளும், ரயில் வசதிகளும் செய்யப்படவில்லை என்பதால் பல இடங்களில் மக்கள் நெரிசல் குறையவில்லை. குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையங்களில் மகக்ள் கூட்டம் அதிகளவில் குவிந்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு மெட்ரோ ரயில் 3.5 நிமிடங்கள் இடைவெளியில் இயக்கப்படுகிறது.

என்றபோதிலும் சில மெட்ரோ ரயில் நிலையங்களில் வெளியேறும் பகுதியில் டிக்கெட் ஸ்கேனர் தற்காலிகமாக ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்பதால் மக்கள் அவதியிலேயே உள்ளனர். பேருந்துகள், ரயில்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தால் இப்பிரச்னைகளை தவிர்த்திருக்கலாம் என மக்கள் ஊறிவருகின்றனர்.

Tags :
ChennaiChennaiMetroIAFIndianAirForceMarinaBeachMetroTrain
Advertisement
Next Article