டொவினோ தாமஸ் நடிக்கும் ”நரி வேட்ட” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் டோவினோ தாமஸ். இவர் மின்னல் முரளி, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு என பிற மொழிகளிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது பிருத்விராஜ் இயக்கத்தில் எல் 2 எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் ”நரி வேட்ட” படத்திலும் நடித்து வருகிறார்.
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இந்த படத்தில் தமிழில் பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இப்படத்திற்க்கு ஜேக்ஸ் பேஜாய் இசையமைக்கிறார்.
இந்நிலையில், நடிகர் டோவினோ தாமஸின் பிறந்தநாளை முன்னிட்டு நரி வேட்ட படக்குழு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.