தொடர் விடுமுறையால் ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள் | வரிசையில் காத்திருந்து படகு சவாரி!
05:49 PM Dec 26, 2023 IST
|
Web Editor
மேலும் உதகையில் நிலவும் இதமான காலநிலை காரணமாக இயற்கையை ரசித்தபடி, தங்களது குடும்பத்தினருடன் படகு சவாரி செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால், உதகையில் அமைந்துள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. வரும் நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
தொடர் விடுமுறை காரணமாக உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான உதகை படகு இல்லத்தில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
Advertisement
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என தொடர் விடுமுறைகளை ஒட்டி தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்து வருகின்றனர்.
உதகையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான உதகை படகு
இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரிசையில் காத்து நின்று, இயந்திர படகு,
மிதவை படகு மற்றும் துடுப்பு படகு உள்ளிட்ட படகுகளில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Article