4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் - யார் தெரியுமா?
கொரோனா பெருந்தொற்று காரணமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள பல நாடுகள் தங்களது எல்லைகளையும், சுற்றுலா பயணிகளுக்கும் தற்காலிகமாக தடை விதித்திருந்தது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சில நாடுகளை சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்திற்கு தளர்வுகளை அறிவித்தது.
கொரோனா பெருந்தொற்றினால் 4 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை -ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது. ஹாங்காங்-சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் தான் விமான சேவைய தொடங்கியது.
ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு ரஷ்யர்களால் செல்ல முடியாத நிலை உண்டானது. இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரஷ்யா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், வடகொரியாவைச் சுற்றுலாவுக்கான தளமாக பரிந்துரைத்தார்.
ரஷ்யாவில் இருந்து சென்றுள்ள பயணிகள் வடகொரிய தலைநகர் பியோங்யாங் சென்றுள்ளனர். வடகொரியாவில் சிறப்பு பெற்ற பனிச்சறுக்கு மீதான ஆர்வத்தால் அவர்கள் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். சீனாவுக்கு பிறகு வடகொரியாவுக்கு சுற்றுலா செல்லும் நாடாக ரஷ்யா உள்ளதால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் ஆயுத பரிமாற்றம் குறித்து அரசியல் விமர்சர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.