விண்வெளியில் மிதக்கும் டூல் பேக் - பூமியிலிருந்து பார்க்க முடியுமா..?
விண்வெளி வீரர்கள் தவறுதலாக தவறவிட்ட டூல் பேக் விண்வெளியில் மிதக்கிறது. அதனை பூமியிலிருந்து பார்க்க முடியுமா என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
பல விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செண்டு சாகசங்களை புரிந்து வருகின்றனர். சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்வெளி வீரரான சுல்தான் அல நயாடி விண்வெளிக்கு சென்று பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அங்கே தேனில் தடவிய ரொட்டித் துண்டுகளை உண்பது. விண்வெளியில் மிதப்பது, தண்ணீர் எப்படி மிதக்கிறது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.
இந்த நிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் (NASA) சேர்ந்த இரு விண்வெளி வீரர்கள் தங்களது விண்வெளி நிலையத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது டூல் பேக்கை தெரியாமல் கீழே போட்டுவிட்டனர். இந்த டூல் பேக் தற்போது விண்வெளியில் மிதந்துகொண்டே இருக்கிறது.
அமெரிக்க விண்வெளி வீரர்களான ஜாஸ்மின் மோக்பெலியும் (Jasmin Moghbeli) லோரல் ஓ ஹாராவும் (Loral O'Hara) விண்வெளி நிலையத்தைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும்போது தங்களிடம் இருந்த டூல் பேக் கீழே தவறுதலாக விழுந்துள்ளது. இருவரும் விண்வெளி நிலையத்திற்கு வெளியே சுமார் 7 மணிநேரத்திற்கு மேலாக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது கீழே விழுந்த அந்த டூல் பேக் விண்வெளியில் மிதக்கிறது.