Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி | சூடுபிடிக்கும் மைதானங்கள்..!

10:43 AM Jan 14, 2024 IST | Web Editor
Advertisement

நாளை தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவரமாக நடைபெற்று வருகிறது.  

Advertisement

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே ஜன. 15, 16, 17 தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளைக் காண தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பது வழக்கம்.

இதையொட்டி, ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. பாதுகாப்பு கட்டமைப்புகள், ஜல்லிக்கட்டு மைதானத்தை சமன் செய்தல், வாடிவாசல், மேடை, முக்கிய விருந்தினா்கள் மாடம், பாா்வையாளா்கள் மாடம் அமைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், பாா்வையாளா்கள், பங்கேற்பாளா்களுக்குத் தேவையான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகளும், ஆபத்துக் கால முதலுதவி, அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் விரிவாக மேற்கொள்ளப்படுகின்றன.

அவனியாபுரத்தில் மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பணிகள் நடைபெறுகின்றன. அலங்காநல்லூா், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரும், அரசுத் துறை அலுவலா்களும் இணைந்து பணிகளை மேற்கொள்கின்றனா். திருப்பரங்குன்றம்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகமே ஏற்று நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் பகுதி, விழா மேடை, பாா்வையாளா், செய்தியாளா் மேடை பகுதிகளை மாநகராட்சி நகா்புற வளா்ச்சி திட்டமிடல் செயற்பொறியாளா் மாலதி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து இந்தப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் நடமாடும் கழிப்பறை, குடிநீா், பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க 2 ஆயிரத்து 400 காளைகளும், 318 மாடுபிடி வீரா்களும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்தனா்.

Advertisement
Next Article