எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
09:32 AM Aug 09, 2024 IST
|
Web Editor
இதனைத் தொடர்ந்து, விளையாட்டுப் பிரிவு இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு இன்று (ஆக.9) மற்றும் ஆக.12ம் தேதியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் 19ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து, ஆக.21 முதல் கலந்தாய்வு தொடங்கிறது.
Advertisement
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் (ஆக.9) நிறைவடைகிறது.
Advertisement
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 9,050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல் மொத்தம் 2,200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த சூழலில் நடப்பாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகான விண்ணப்பதிவு கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. இதற்காக நீர் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வந்தனர்.
இந்த படிப்புகளுக்கான இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பதிவு இன்றுடன் (ஆக.9) நிறைவடைகிறது.
Next Article