Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TNRains | “வங்கக்கடலில் மீண்டும் அக்.21-ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்” - #IMD அறிவிப்பு!

03:06 PM Oct 19, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக ஒரு நாள் முன்கூட்டியே அதாவது வங்கக்கடலில் நாளை மறுநாள் (அக். 21) மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வங்கக்கடலில் கடந்த 14-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி கனமழை பெய்தது. வானிலை மையம் கணித்தபடி, சென்னைக்கு அருகே வடக்கே எண்ணூரையொட்டி 17.10.2024-ஆம் தேதி கரையை கடந்தது.

இந்நிலையில், அரபிக்கடலில் 12 மணி நேரத்திலும், வங்கக் கடலில் 22-ம் தேதியும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : #PowerCut | தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இன்று மின்தடை… முழு விவரம்!

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். வங்கக்கடலில் 22-ந்தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று, நாளை, நாளை மறுநாள் மற்றும் அக்டோபர் 24ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகளாலும் தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது” இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக ஒரு நாள் முன்கூட்டியே அதாவது வங்கக்கடலில் நாளை மறுநாள் (அக். 21) மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், அது வலுப்பெற்று 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Heavy rainfallNews7Tamilrain alertrainsTamilNaduTn RainsWeatherWeather Update
Advertisement
Next Article