Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

08:22 PM May 27, 2024 IST | Web Editor
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் இணையதளங்கள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.  அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரியில் வெளியிட்டது.  இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜன.30-ம் தேதி தொடங்கி பிப். 28-ம் தேதி வரை நடைபெற்றது.

எழுத்துத் தேர்வு ஜூன் 9-ம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.  தமிழ் தகுதித் தாள் 100, பொது அறிவுத் தாள் 100 என மொத்தம் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில், தமிழ் தகுதித்தாள் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பாடம் சார்ந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் :  “மீண்டும் சொல்கிறேன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவவாதி” – அண்ணாமலை பேட்டி!

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Tags :
examGroup4TamilNadutamilnadu public service comissionTNPSC
Advertisement
Next Article