Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

TNPSC குரூப் 2, 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்!

08:47 PM Dec 13, 2024 IST | Web Editor
Advertisement

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

https://twitter.com/TNPSC_Office/status/1867558881767174433

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தேர்வர்களின் நலன் கருதியும், அரசுத்துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 2 (தொகுதி 2 மற்றும் 2A பணிகள்)க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (தொகுதி4 பணிகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டு https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Group 2Group 4News7TamilSyllabusTNPSC
Advertisement
Next Article