டிஎன்பிஎல் கிரிக்கெட்: 51 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தியது திருப்பூர் தமிழன்ஸ் அணி!
டிஎன்பிஎல் 51 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 8வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற 20வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. திருப்பூர் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாத்விக், துஷார் ரஹேஜா ஆகியோர் களமிறங்கினர்.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் 1 ரன்னிலும் முகமது அத்னான் கான் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர். அடுத்து வந்த விஷால் வைத்யா 35 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஹரிஷ் குமார் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய ரவி ராஜன் அரைசதம் கடந்தார். இருப்பினும், 20 ஓவர்கள் முடிவில் சேலம் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.