Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிஎன்பிஎல் கிரிக்கெட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்தியது திண்டுக்கல் அணி!

06:58 AM Jul 18, 2024 IST | Web Editor
Advertisement

டிஎன்பிஎல் 16வது லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.  

Advertisement

8 அணிகள் பங்கேற்றுள்ள 8வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.  லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் நேற்று இரவு நடந்த 16வது லீக்கில் திருப்பூர் தமிழன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.  போட்டி தொடங்குவதற்கு முன் மழை குறுக்கிக்கிட்டதால் 2 மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. இதனால் 13 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.  இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அந்த வகையில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராதாகிருஷ்ணன் 36 ரன்னும், துஷர் ரஹேஜா 32 ரன்னும் எடுதது வெளியேறினர்.  திண்டுக்கல் அணி தரப்பில் சுபோத் பாத்தி 3 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இறுதியில் திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்குகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடம் திண்டுக்கல் அணி களமிறங்கியது.  அந்த அணியில் பாபா இந்திரஜித் 31 ரன்களும், பூபதி குமார் 51 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். திண்டுக்கல் அணி 11.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்குகள் இழப்புக்கு இலக்கை கடந்து 111 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் திண்டுக்கல் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  4வது லீக்கில் ஆடிய திண்டுக்கல் அணிக்கு இது 2வது வெற்றியாகும். திருப்பூருக்கு 3வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Tags :
#SportsCricketDD vs DTTDingigul DragonsDTT vs DDIdream Tiruppur TamizhansTNPL
Advertisement
Next Article