Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருச்சியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி!

07:02 AM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

டிஎன்பிஎல் 21வது லீக் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

8 அணிகள் பங்கேற்றுள்ள 8வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.  லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று நடைபெற்ற 21வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சந்தோஷ் குமார், ஜெகதீசன் செஞ்சுரி ஆகியோர் களமிறங்கினர்.  இருவரும் அரைசதம் அடித்த நிலையில் சந்தோஷ் குமார் 56 ரன்களிலும், ஜெகதீசன் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இவர்களை அடுத்து ஆடிய பெராரியோ 30 ரன்களிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 29 ரன்களிலும், அபிஷேக் தன்வார் 26 ரன்களிலும் வெளியேறினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்தது. திருச்சி தரப்பில் அதிகபட்சமாக ராஜ்குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி பேட்டிங் செய்தது.

அதன்படி, திருச்சி அணியின் வீரர்களான வாஷீம் அகமது 48 ரன்களும், ஆர் ராஜ்குமார் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஆடிய ஜாபர் ஜமால் 52 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி  7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம்14 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Tags :
#SportsChepauk Super GilliesCricketCSG vs TGCTGC vs CSGTNPLTrichy Grand Chols
Advertisement
Next Article