Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதிய குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

10:49 AM Mar 13, 2024 IST | Web Editor
Advertisement

புதிய குடும்ப அட்டை இல்லாவிட்டாலும்,  இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.  கடந்த 2021 முதல் கடந்த ஆண்டு ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.  குடும்ப அட்டைகளின் அடிப்படையில் புதிய நலத்திட்ட உதவிகளை அளிக்க வசதியாக, குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யும் பணி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனு!

முன்னதாக,  இணையவழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுடைய 45,409 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த குடும்ப அட்டைதாரர்கள் அளித்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  புதிய குடும்ப அட்டை இல்லாத காரணத்தாலேயே அவர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது.

எனவே,  குடும்ப அட்டைகள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு அதனுடைய விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுவதால்,  அதைக் நியாயவிலைக் கடைகளில் காண்பித்து பொருள்களைப் பெறலாம் எனவும் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்புக்குப் பிறகு, பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CMOTamilNadufamily cardMKStalinRationShopTamilNaduTNGovt
Advertisement
Next Article