Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் "தமிழ் புதல்வன்" திட்டம்...முன்னேற்பாடுகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு...

09:18 AM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு நடத்துதல் மற்றும் நெறிமுறைகள் வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு 1 (Content Assessment-1) வருகின்ற ஆகஸ்ட் 19 முதல் 23 ஆம் தேதி வரை கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் பொறுப்புகள்:

பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு 1 (Content Assessment -1) நடத்தி முடித்திட அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான பொறுப்புகள்:

தலைமையாசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மேற்காண் வழிகாட்டுதல்களை எடுத்துரைத்து அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் இம்மதிப்பீடு முழுமையாக நடைபெறுவதை உறுதி செய்திடல் வேண்டும். மதிப்பீட்டுத் தேர்வில் கலந்து கொண்ட / கொள்ளாத மாணவர்களின் தகவல்கள், கலந்து கொண்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள் உள்ளிட்ட விவரங்கள், தேர்வு முடிந்த ஓரிரு வாரங்களில் மாநில இயக்குநரகத்திலிருந்து மாவட்டங்களுக்கு பகிரப்படும்.

தலைமை ஆசிரியர் மற்றும் உயர்கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியரின் பொறுப்புகள்:

பள்ளிகளில் இம்மதிப்பீடு தடையின்றி செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்திட பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். http://locsrv.in:8080 என்ற இணைய தளத்தில் மதிப்பீட்டுக் கருவி தெரிகிறதா என்பதை அனைத்துப் பள்ளிகளும் சரிபார்க்க வேண்டும்.EMIS இல் அனைத்து மாணவர்களின் விவரங்களும் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து மாணவர்களின் விவரங்களும் சரியாகப் பதிவு செய்யப்பட்டவுடன், முன்பு செய்ததைப் போல HM/School உள்நுழைவைப் (credentials) பயன்படுத்தி நிர்வகி பக்கத்திலிருந்து நற்சான்றிதழ்களைப் புதுப்பிக்குமாறு பள்ளிகளுக்குத் தெரிவிக்கவும்

இதையும் படியுங்கள் : 3 தலைமுறையாக அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்கள் – அரசு நடிவடிக்கை எடுக்க கோரிக்கை!

உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களின் வழி வினாடி வினா மதிப்பீடுகள்:

Tags :
CMOTamilNaduHigherEducationMKStalinNaan MudhalvanschemeTamilNaduTNGovt
Advertisement
Next Article