Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

TN Weather Update | 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! - வானிலை ஆய்வு மையம் தகவல்...

08:45 AM Nov 29, 2023 IST | Web Editor
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

நேற்று முன்தினம் (27-11-2023) காலை 8.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று (28-11-2023) காலை 8.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில்,  இன்று தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே செல்லும் இரவு ரயில் இன்று முதல் ரத்து -தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tags :
ChennaiRainsChennaiRMCHeavyRainNews7Tamilnews7TamilUpdatesRainUpdateWeatherUpdate
Advertisement
Next Article