Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காவிரியில் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரருக்கு இன்று தீர்த்தவாரி!

05:58 PM Feb 24, 2024 IST | Web Editor
Advertisement

காவிரியில் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரருக்கு இன்று தீர்த்தவாரி நடைபெற்றது.  

Advertisement

மாசி மாத பௌர்ணமி மற்றும் மக நட்சத்திரம் சேர்ந்து வரும் நாள் மாசி மக பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கடற்கரையில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். மேலும் இன்று பொதுமக்கள்,  தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கம்.

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேசுவரர் கோயில் உள்ளது.  இந்த கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் என்று கூறப்படுகிறது. இந்த கோயில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும்,  புதனுக்கு உரிய தலமாகவும் கருதப்படுகிறது.

இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த பழமையான சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் இந்திரப் பெருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம்.  அவ்வகையில் இவ்வாண்டு இந்திர பெருவிழா பிப்.21 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த நிலையில், பௌர்ணமி,  மாசிமகத்தை முன்னிட்டு காவிரியில் அதிகாலை 6 மணியளவில் அஸ்திர தேவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, தீர்த்த வாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கடல் மற்றும் காவிரியில் நீராடி சுவாமியை வழிபட்டனர்.

Tags :
devoteesfestivalMasiMagamMayiladuthurai
Advertisement
Next Article