Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி - லட்டு தயாரிக்கு பணி தீவிரம்!

03:14 PM Dec 21, 2023 IST | Web Editor
Advertisement

திருப்பூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று பிரசாதமாக வழங்குவதற்காக 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியில் 200 பேர் ஈடுபட்டுள்ளானர்.

Advertisement

வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள் கோயிலில் வருகிற சனிக்கிழமை நடைபெறுகிறது. திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டும் இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதையும் படியுங்கள் : மத்திய சிறையில், திமுக அமைச்சர்களுக்கு ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் - அண்ணாமலை பதிவு!

அதனை தொடர்ந்து, வைகுண்ட ஏகாதசி நாளில் இந்த கோயிலுக்கு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு வழங்கிட திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

திருப்பூர் காமாட்சி அம்மன் கல்யாண மண்டபத்தில் நடந்து வரும் இப்பணிகளில், 200 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். லட்டு தயாரிக்க வந்துள்ள தன்னார்வலர்களுக்கு தலைகவசம், முககவசம், கிளவுஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு பாதுகாப்பான முறையில் லட்டு
தயாரிக்கப்பட்டு வருவதாக ஸ்ரீவாரி டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன்
தெரிவித்தார்.

Tags :
Lattuperumal templeTirupurVaikunda Ekadasi
Advertisement
Next Article