கோயிலுக்குள் பொங்கல் வைத்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள்? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஆலய நுழைவு போராட்டம் நடத்துவதாக அறிவித்து கோயிலுக்குள் காவல்துறை பாதுகாப்புடன் பொங்கல் வைத்ததால் 10 குடும்பத்தினரை ஊரை விட்டு
ஒதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த மாரியம்மன் கோயிலில் மாற்று சமூகத்தினர் நுழைய அனுமதிப்பதில்லை என கூறப்படுகிறது. இதனை மாவட்ட ஆட்சியாரிடம் புகார் அளித்த மாற்று சமூகத்தினர், தங்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாற்று சமூகத்தினர் அளித்த புகாரின் பேரில் வருவாய் துறை கண்காணிப்பில், காவல்துறை பாதுகாப்பில் கடந்த 11ஆம் தேதி 10 குடும்பத்தார் பொங்கல் வைத்து ஆலயத்தில் நுழைவு மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பிரதமர் மோடி!
மேலும், கோயிலுக்குள் நுழைந்ததால் அந்த 10 குடும்பத்தாரையும் அதே சமுகத்தை சேர்ந்த மக்கள் மாற்று சமூகத்தினரின் வலியுறுத்தலின் பேரில் தங்கள் ஊருக்குள்ளேயே ஒதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், வேலை செய்யும் இடங்களில் சொல்லி அந்த 10 குடும்பத்தாரையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தின் மீது உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.