Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் தெப்போற்சவம்! - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

07:43 AM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜசுவாமி கோயிலில் தெப்போற்சவத்தின் 2-ஆம் நாளான நேற்று பார்த்தசாரதி சாமி தெப்பத்தில் வலம் வந்தார்.

Advertisement

திருப்பதியில் ரத சப்தமி விழா கடந்த 16ஆம் தேதி கோலாகலமாகக் நடைபெற்றது. இதையடுத்து, காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் மலையப்பசுவாமி வீதி உலா வந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படியுங்கள் : தமிழ்நாடு சட்டப்பேரவை: 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல்!

திருப்பதி உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் 5 நாட்கள் நடைபெறும் கோவிந்தராஜ சுவாமி கோயில் தெப்போற்சவம் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தெப்ப உற்சவத்தில் மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகின்றனர். முதல் நாள் ஸ்ரீ கோதண்டராமசுவாமி சீதா லக்ஷ்மணருடன் புஷ்கரணியில் தெப்பத்தில் வலம் வந்தார்.

இதையடுத்து, கோவிந்தராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று கோவிந்தராஜர், பார்த்தசாரதி அலங்காரத்தில் பாமா,ருக்மணி சமேதராக தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிந்தராஜர், பார்த்தசாரதி
அலங்காரத்தில் பாமா, ருக்மணி சமேதராக கோயிலில் இருந்து புறப்பட்டு குளத்தை அடைந்து தெப்பத்தில் எழுந்தருளினார்.  இதனைத் தொடர்ந்து தெப்ப உற்சவம் நடைபெற்றது.அப்போது கோயில் குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பக்தர்கள்
கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழுப்பி வழிபாடு மேற்கொண்டனர்.

Tags :
devoteesGovindaraja Swamy TemplePerumalTemplesami dharshanTepposavamTirupathi
Advertisement
Next Article