Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயில் - 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் !

11:10 AM Apr 28, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

Advertisement

கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் அனைத்து சுற்றுலா தளங்களிலும்  மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.

சுற்றுலா தளங்களே இப்படியானால், சித்திரை மாதத்தில் கோயில் தளங்களை சொல்லவா வேண்டும். எப்போதும் கூட்டம் அதிகரித்தே காணப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சித்திரை மாதத்தில் கூடுதலாக பக்தர்களின் வருகை இருக்கும்.  இதனால  அனல் பறக்கும் வெயிலிலும் 18 மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோப்பு படம்

இதுகுறித்து தேவஸ்தானம் தெரிவித்துள்ளதாவது;

‘நேற்றைய காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் ஏழுமலையான் தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால், தர்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவர்கள்) 18 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைபடுகிறது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவர்களின் பெற்றோர், இரவு 10 மணி வரை அனைத்து பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 57,909 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,306 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் மூலம் பக்தர்கள் சமர்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.3.81 கோடி கிடைத்தது’ என தெரிவித்துள்ளது.

Tags :
BakthidevoteesSummer HolidaysTirupathiVenkateswara Swamy Temple
Advertisement
Next Article