Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TirupatiLaddu பிரசாத சர்ச்சை | புனித நீர் தெளித்து கோயிலை புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரம்!

12:25 PM Sep 23, 2024 IST | Web Editor
Advertisement

புரட்டாசி மாதம் பிரம்மோத்சவம் தொடங்கவிருக்கும் நிலையில், லட்டு பிரசாத சர்ச்சையால் ஏற்பட்ட களங்கத்தை போக்க இன்று மகாசாந்தி யாகம் நடத்தி கோயிலை புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

Advertisement

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய ஆந்திர மாநில ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டன. குறிப்பாக , லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கொழுப்புகள் ஆகியவை இருந்ததாக கூறப்பட்டன.

பக்தர்களுக்கு கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக கூறப்படும் குற்றசாட்டுகள் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விளக்கம் அளிக்கையில், நெய் லிட்டருக்கு தோராயமாக ரூ.350க்கு தான் வாங்கப்படுகிறது. அதற்கு சுத்தமான பசு நெய் கொடுக்கப்படவில்லை. ஏ.ஆர்.நிறுவனத்திடம் (திண்டுக்கல்) இருந்து கடந்த ஜூன் , ஜூலை மாதங்களில் நெய் வந்துள்ளது. அதில் தரம் குறைவான நெய் இருந்தது என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அதற்கு மத ரீதியிலான பரிகாரமாக ‘சிறப்பு தோஷ நிவாரண சாந்தி’ யாகத்தை திருப்பதி கோயில் அர்ச்சகர்கள் நடத்தியுள்ளனர்.  இன்று காலை 6 மணி முதல் தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள் மற்றும் 3 ஆகம ஆலோசகர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து யாகம் நடத்தியுள்ளனர்.

இந்த யாகத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை லட்டு, பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தெளித்து அதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தி அடையும் என திருப்பதி தேவஸ்தான மூத்த நிர்வாகி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.

Tags :
Andhra PradeshTirupati ControversyTirupati Laddu
Advertisement
Next Article