Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் #Tirupati தேவஸ்தான நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!

03:52 PM Sep 22, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை தேவஸ்தான நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.

Advertisement

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.

லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு , பாமாயில் எண்ணெய் உள்ளிட்டவை கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். மேலும் திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள் : இந்தியாவில் #iPhone புதிய வரவுகளின் முதல் நாள் விற்பனை - கடந்த ஆண்டைவிட 25% அதிகரிப்பு!

திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை தேவஸ்தான நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்கி 9 நாட்கள் திருப்பதி மலையில் ஏழுமலையானின் வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற உள்ளது. அதனால், திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சந்திப்பின்போது கலப்பட நெய் விவகாரம் குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கோயில் பரிகார பூஜைகள் செய்வது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

Tags :
Andhra Chief MinisterDevasthanam executivesNews7Tamilnews7TamilUpdatesTirupati Lattu issue
Advertisement
Next Article