#TirupatiLaddu விவகாரத்தில் Twist | சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை திடீர் நிறுத்தம்!
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, குண்டூர் சரக ஐ.ஜி. சர்வ ஷரஸ்தா திரிபாதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி, இந்த விவகாரத்தில் ஐஜி தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை ஆந்திர மாநில அரசு அமைத்தது. இந்த குழு நேற்று முன்தினம் விசாரணையைத் தொடங்கியது.
இந்நிலையில் சிறப்பு குழு விசாரணையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஆந்திர டிஜிபி துவாரகா திருமலா ராவ் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் (அக்.3) வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.