Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ThirupatiLaddu | உயர்நீதிமன்றத்தில் ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் வழக்கு!

01:57 PM Sep 20, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு கலந்திருந்ததாக, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டிய நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisement

ஆந்திராவில் கடந்த 5 வருடங்களாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரான ஓய்.எஸ் ஷர்மிளா கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து நேற்று லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் பாமாயில் எண்ணெய் கலந்து இருப்பதும்
உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பதவியில் இருக்கும் நீதிபதி அல்லது உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு விசாரணை நடத்த வேண்டும் என ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சி மனு அளித்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு பட்டியலிட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
Beef TallowFish OilGheeTirupathi LaddooYRS Congress
Advertisement
Next Article