Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்ப உற்சவம் நிறைவு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்போற்சவம் நிறைவு.
07:53 AM Mar 14, 2025 IST | Web Editor
Advertisement

ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9-ம் தேதி தெப்ப உற்சவம் தொடங்கியது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

Advertisement

இந்நிலையில் திருப்பதி மலையில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த தெப்போற்சவம் ஐந்தாம் நாளான இன்று நிறைவடைந்தது. நிறைவு நாளான இன்று தெப்போற்சவம் கண்டருள்வதற்காக உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக கோயிலில் இருந்து புறப்பட்டு ஏழுமலையான் கோயில் திருக்குளத்தை அடைந்தார்.

அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர்கள் எழுந்தருளிய நிலையில்
திருக்குளத்தில் ஏழு சுற்றுக்களாக தெப்போற்சவம் நடைபெற்றது. அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான
பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து உற்சவர்கள் நான்கு மாட வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர்.

Tags :
ConcludesTeppotsavamTirumala
Advertisement
Next Article