Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்!

07:35 AM Nov 10, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று உற்சவர்களுக்கு சுமார் ஒன்பது டன்
எடையுள்ள மலர்களால் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான புஷ்ப யாகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக திருப்பதி
மலையில் உள்ள தேவஸ்தானத்தின் தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள்,
அதிகாரிகள் ஆகியோர் சுமார் ஒன்பது டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்கள்,
பத்திரங்கள் ( இலைகள்) ஆகியவற்றை ஊர்வலமாக கொண்டு வந்து கோயில்
அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு 9 டன் மலர்களை
உற்சவர்களின் கழுத்தளவு வரை மூன்று முறை நிரப்பி, கோயில் அர்ச்சகர்கள் புஷ்ப
யாகம் நடத்தினர். புஷ்ப யாகத்தில் தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர். இந்த புஷ்ப யாகத்தில் 17 வகையான மலர்கள், ஆறு வகையான பத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இதற்காக தமிழ்நாட்டில் இருந்து ஐந்து டன் எடையுள்ள மலர்களையும், கர்நாடகா,
ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா இரண்டு டன் எடையுள்ள மலர்களையும்
பக்தர்கள் நன்கொடையாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
FlowersPushpa YagamSrivari TempleTirumala
Advertisement
Next Article