Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருநெல்வேலி, நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் இறுதிவரை நீட்டிப்பு!

11:38 AM Jun 02, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலகள் ஜூன் மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் வரை வியாழன் தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது..

“திருநெல்வேலியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.45 எழும்பூருக்கு புறப்படும் சிறப்பு ரயிலும் (எண்: 06070) மறுமார்க்கத்தில் எழும்பூரிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் ரயிலும் (எண்: 06069) ஜூன் 6 முதல் ஜூன் 28-ஆம் தேதி வரைநீடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாகர்கோவில் சென்னை எழும்பூர் இடையே இயங்கும் வாரந்திர சிறப்பு ரயில் (எண்: 06019/06020) கேரள மார்க்கமாக இயங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழகம் வழியாக இயக்கப்பட உள்ளது.

அதன்படி, நாகர்கோவிலில் இருந்து ஜூன் 9, 23 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இந்த ரயில் எழும்பூருக்கு மறுநாள் காலை 11.15 மணிக்கு வந்தடையும்.

மறுமார்க்கமாக ஜூன் 10, 24 ஆகிய தேதிகளில் எழும்பூரிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டும் இந்த ரயில் அதே வழியாக மறுநாள் காலை 3.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Nagerkovilsouthern railwayTirunelvelitrains
Advertisement
Next Article