Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருநெல்வேலி சாதிய வன்கொடுமை : 6பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

09:22 PM Nov 09, 2023 IST | Web Editor
Advertisement

திருநெல்வேலி மணி மூர்த்தீஸ்வரம் பகுதியில் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆறு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த அக்டோபர் 30-ம் தேதி திருநெல்வேலி மாநகரத்திற்கு உட்பட்ட மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் இளைஞர்கள் இரண்டு பேரை, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கி அவர்களிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் எந்த சாதி என கேட்டு தெரிந்துகொண்ட பின், இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர். அவர்களை மாலை முதல் இரவு வரை வைத்திருந்து சித்தரவதை செய்தனர்.

இருவரையும் மீட்ட ஊர்மக்கள் அவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் அறிந்து வழக்கு பதிவு செய்த திருநெல்வேலி மாநகர் தச்சநல்லூர் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பொன்மணி (25), நல்லமுத்து (21), ஆயிரம்(19), ராமர்(22), சிவா(22), லட்சுமணன் (20) ஆகிய 6 பேரை கைது செய்தனர். 

இந்த சம்பவம் அரங்கேறிய அதே வேளையில் ஆச்சிமடம் பகுதியில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். இவர் வெட்டியம்பந்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர். அப்போது அவ்வழியாக சென்ற கும்பல், அவரை வழிமறித்து அவரது சாதியை கேட்டு கல்லால் அடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஊர் பெயரையும் சாதி பெயரையும் கேட்டு தாக்குதல் நடத்தியதாக படுகாயம் அடைந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தைச் சேர்ந்த (1) பொன்னுமணி, (2) முத்து என்ற நல்லமுத்து, (3) லெட்சுமணகுமார்,(4) ஆயிரம், (5) ராமர், (6) சிவன் என்ற சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் ச.மகேஸ்வரியின் உத்தரவின்படி கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

Tags :
#caste attrocitiesDalithdalith attrocitiesthirunelveliTirunelveliurinated
Advertisement
Next Article