திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம் - பக்தர்கள் விநோத வழிபாடு!
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் கந்தசஷ்டி தேரோட்டம் நிகழ்வில் வினோத வழிபாடு, கும்பிடு கரண சேவை நடத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் கடந்த 13ம் தேதி
கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது.
இதனை தொடர்ந்து, இன்று வண்டாடும் பொட்டலில் உள்ள மாரியம்மன் கோயில் திடலில்
தேரோட்டமும் கும்பிடு கரண சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான
பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பண்பொழி கரிசல்குடியிருப்பு, செங்கோட்டை, அச்சன்புதூர், கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.