Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ளது - தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம்!

08:22 PM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement

திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளது.  

Advertisement

திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளதாக, தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் எழுதியுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலியானது.

தற்போது தேர்தல் ஆணையத்திற்கு இது தொடர்பாக முறைப்படி சட்டபேரவை செயலகம் கடிதம் எழுதியுள்ளது. இதனால், நாடாளுமன்ற தேர்தலின் போது திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால், இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.

Tags :
Eelction CommissionLegislative Assembly SecretaryponmudiTirukoilur
Advertisement
Next Article