திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார். இதனால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தியிருந்தனர்.
புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. சங்க இலக்கியங்கள், மற்றும் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில், 2000 முதல் 3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாக கருதப்படுகின்றது. ஆறுபடை வீடுகளில் மற்ற எல்லா கோயில்களும் மலைகளில் அமைந்துள்ள நிலையில் திருச்செந்தூர் திருக்கோயில் ஒன்றே கடலுக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனத்திற்காக இன்று சென்றிருந்தார். காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் அவரை கோயிலுக்குள் அழைத்து சென்றனர். நடிகர் அல்லு அர்ஜூன் புஸ்பா 2 பட வெளியீட்டின் போது கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்ததை அடுத்து நடிகர்கள் செல்லும் இடத்திற்கு காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு வழங்குகின்றனர்.