Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்செந்தூர் மாசித் திருவிழா | வெள்ளி வாகனத்தில் அருள்பாலித்த முருகர்!

08:03 AM Feb 18, 2024 IST | Web Editor
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 4-ம் திருநாளான நேற்று முருகர் மற்றும் அம்பாள் வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

Advertisement

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய
சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்று மாசித் திருவிழா. இந்த மாசித் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறக்கூடிய இத்திருவிழாவிழாவில் நாள்தோறும் முருகரும், அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று  பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அந்த வகையில் இந்தாண்டும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி காட்சி அளித்து வருகின்றனர்.

  4-ம் திருநாளான நேற்று மேலக்கோயிலில் இருந்து முருகர் குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி எட்டு திருவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருட்பாலித்தனர். கோலாகலமாக நடைபெற்ற இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Tags :
BakthidevoteesMasi ThiruvizhaSubramania Swamy Templetiruchendur
Advertisement
Next Article