Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

10:31 AM Jul 20, 2024 IST | Web Editor
Advertisement

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆடி மாத பௌர்ணமி தினத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலானது, முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த
பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக பௌர்ணமி தினத்தில் கோயில் கடற்கரையில் தங்கி சுவாமி தரிசனம் செயதால் வேண்டுதல் நிறைவேறும் என மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக பௌர்ணமி தினங்களன்று பக்தர்கள் வருகை அதிகமாக இருந்து வருகிறது.

அன்று குடும்பமாக கடற்கரையில் தங்கியிருந்து பரிகார பூஜைகள் செய்து, வழிபாடு
நடத்துகின்றனர். இந்நிலையில் நாளை பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர். இதற்காக கோயிலில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தடுப்புகள் அமைத்து, கூடுதல் வரிசை முறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Tags :
BakthidevoteesFull moonmurugan templeThiruchendur
Advertisement
Next Article