Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Maharashtra -வில் 3 ஆண்டுகளாக 11 பேரைக் கொன்ற புலி | போராடிப் பிடித்த வனத்துறை!

03:14 PM Sep 29, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. iதனால் வனப்பகுதி அருகே இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து அடிக்கடி புலிகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சந்திரபூர் மாவட்டத்தில் சிச்பள்ளி வனப்பகுதியில் உலவி வந்த பெண் புலி கடந்த 3 ஆண்டுகளில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 11 நபர்களைக் கொன்றுள்ளது. இதையடுத்து வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் வசித்து வந்தனர்.

Advertisement

இந்நிலையில், டி 83 என்று அழைக்கப்படும் அந்தப் பெண் புலி நேற்று காலை ஜனலா எனும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் சுற்றித் திரிந்ததாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பட்டது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் மயக்க மருந்து செலுத்திப் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : குற்றவாளிகளுக்கு உறுதுணை? - #Whatsapp இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு! நடந்தது என்ன?

கால்நடை மருத்துவர்கள் மற்றும் பல அதிகாரிகளும் புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக பலமுறை கூண்டுகள் வைத்து பிடிக்க முயற்சி செய்தும் தப்பித்துவந்த இந்தப் புலி 3 ஆண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டிருப்பது மிகவும் நிம்மதியாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
Forest DepartmentkilledMaharashtraNews7Tamilnews7TamilUpdatestiger
Advertisement
Next Article