Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபிநய் காலமானார்

‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபிநய் (44) காலமானார்.
12:01 PM Nov 10, 2025 IST | Web Editor
‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபிநய் (44) காலமானார்.
Advertisement

நடிகர் தனுஷ், ஷெரின் உள்ளிட்டோர் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அபிநய். முதல் திரைப்படம் அபிநய்க்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதனைத்தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் ஒரு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்‌.

Advertisement

பின்னர், அவர் பாலைவனச் சோலை, ஆரோகணம், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். அதுபோல துப்பாக்கி, அஞ்சான் திரைப்படத்தில் நடிகர் வித்யூக் ஜாம் வால்யூவுக்கு இவர்தான் பின்னணி குரல் வழங்கி இருந்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் உருவாகினார். தொடர்ந்து, இவர் விளம்பரங்களிலும் நடித்திருந்தார்.

ஆனால் சில வருடங்களாக இவர் சினிமா மற்றும் விளம்பரங்களில் பெரிதாக நடிக்கவில்லை. இந்த சூழலில் கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பணத்துக்கு கஷ்ட படுவதாக இவர் தெரிவித்திருந்ததை அடுத்து நடிகர் தனுஷ் உட்பட பலர் இவருக்கு பண உதவி செய்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் நடிகர் அபிநய் (44) காலமானார்.

Tags :
AbhinayactorcinemaRIP Rbhinay
Advertisement
Next Article